தமிழ்நாடு

இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வணிக உரிமம்; முதல்வர் அறிவிப்பு

5th May 2022 03:32 PM

ADVERTISEMENT

திருச்சி: வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமை பெற்றால் போதும் என்று  திருச்சி வணிகர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருச்சி வணிகர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

வணிகர்களுக்கு சாதகமாக ஜிஎஸ்டி மன்றத்தில் வரிச்சலுகைகளையும், சில வரிகள் கைவிடுதலையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுவரை 65 வரிகளை மாநில அரசு கைவிட்டுள்ளது.

ADVERTISEMENT

தீ விபத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.5000 வழங்கப்பட்டடு வந்தது. அது இனி ரூ.20,000 மாக வழங்கப்படும்.  வணிகர் உயிரிழந்தால் நலவாரியம் சார்பில் வழங்கப்பட்டுவந்த ரூ.1 லட்சம் இழப்பீடு, இனி ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமை பெற்றால் போதும். இனி உடற்பயிற்சி கூடங்களுக்கு காவல் உரிமம் தேவையில்லை. 

சாலை விரிவாக்கத்தின் போது பாதிக்கப்படும் வணிகர்களுக்கு, உள்ளாட்சி அமைப்பு வாடகை கட்டிடங்களை வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு கட்டடங்களில் வணிகர்களுக்கு வாடகை நிர்ணயம் செய்ய தனியாக கமிட்டி அமைக்கப்படும். 

வணிகர் நல வாரியத்தை மேம்படுத்த பேரமைப்பு நிர்வாகிகளை கொண்ட புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். திமுக ஆட்சி எப்போதும் வணிகர் நலன் பேணும் அரசாக இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT