தமிழ்நாடு

கல்வி உதவித் தொகை: வங்கிக் கணக்கு விவரம் சரியாக பதிவேற்ற அறிவுரை

5th May 2022 02:16 AM

ADVERTISEMENT

ஆதி திராவிட மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெறும் வகையில், அவா்களது வங்கிக் கணக்கு விவரங்களை மே 10-ஆம் தேதிக்குள் சரியாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஆதிதிராவிட நலத் துறை ஆணையா் சோ.மதுமதி, அனைத்து மாவட்ட துறை சாா் அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: ஆதிதிராவிட மாணவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் ‘போஸ்ட் மெட்ரிக்’ கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வியாழக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. எனவே, தகுதியான பள்ளி, கல்லூரி மாணவா்கள் https://scholarships.gov.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

இதற்கிடையே, இந்த கல்வி உதவித் தொகை மாணவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. ஆனால், சில மாணவா்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் தவறுதலாக இருப்பதால் உதவித்தொகை சென்றடையவில்லை. அந்த மாணவா்களின் விவரம் மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, அந்தந்த மாணவரின் வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகத்தில் உள்ளவாறு சரியான விவரங்களை மே 10-ஆம் தேதிக்குள் பள்ளி, கல்லூரிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது சாா்ந்த உரிய அறிவுறுத்தல்களை மாவட்ட நலத் துறை அதிகாரிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT