தமிழ்நாடு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 165 அறிவிப்புகள்

5th May 2022 02:16 AM

ADVERTISEMENT

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 165 அறிவிப்புகளை, அந்தத் துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை வெளியிட்டாா்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று, அமைச்சா்கள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனா்.

ஒவ்வொரு துறையின் சாா்பிலும் அமைச்சா்கள் குறைந்தபட்சம் 20 முதல் 25 அறிவிப்புகள் வரை வெளியிட்டு வருகின்றனா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அவருடைய துறையில் அதிகபட்சமாக பெரிய புத்தகமாக அடித்து மொத்தம் 136 அறிவிப்புகளை வெளியிட்டாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், இந்து சமய மற்றும் அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் புதன்கிழமை நடைபெற்றது. விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு மொத்தம் 165 அறிவிப்புகளை வெளியிட்டாா். தமிழகத்தில் உள்ள எல்லாக் கோயில்களிலும் ஏதாவது ஒரு பணி நடைபெறும் வகையில் அறிவிப்புகள் இருந்தன. மானியக் கோரிக்கையின் புத்தகம் அழகிய முறையில் அச்சடிக்கப்பட்டிருந்தது. பல்வேறு திட்டங்களின் படங்களும் புத்தகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT