தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்

2nd May 2022 01:14 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் அடுத்த 2 நாளுக்கு வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், 

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 

02.05.22, 03.05.22: தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

ADVERTISEMENT

04.05.22, முதல் 06.05.22 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ)

பெருந்துறை 13, சோழவந்தான் 6, பொள்ளாச்சி 4, மேட்டுப்பட்டி, பவானி, ஓசூர், கேட்டி, காஞ்சிபுரம் தலா 3, ராயக்கோட்டை, சூளகிரி , சேந்தமங்களம், வால்பாறை, அரக்கோணம், சின்னக்கல்லார், காவேரிப்பாக்கம் தலா 2, பரூர், திண்டிவனம், எட்டயபுரம், ஊத்துக்குளி, குமாரபாளையம், கோபிசெட்டி பாயையம், மாரண்டஹள்ளி, திருவாலங்காடு, வேடசந்தூர் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

04.05.22, 05.05.22: மத்திய கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

06.05.22: மத்திய கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT