தமிழ்நாடு

இளம்பெண் தலையை சுவரில் மோதி கொலை: பிகார் இளைஞர் கைது 

2nd May 2022 07:07 PM

ADVERTISEMENT

 

ஆவடி: அம்பத்தூரில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இளம்பெண் தலையை சுவற்றில் மோதி கொலை செய்த பீகார் வாலிபரை இளைஞரை கைது செய்தனர்.

சென்னை, அம்பத்தூர், ஆசிரியர் காலனி, நேரு தெருவில் வசித்து வருபவர் ஹாரிஸ் பிரம்மா (26). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆகும்.

பிகாரை சேர்ந்தவர் ரஷ்யா காத்தூன் (22). கடந்த ஜனவரி மாதம் முதல் இவர்கள் இருவரும் கணவன்- மனைவி போல வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் ரஷ்யா காத்தூன் மீது ஹாரிஸ் பிரம்மாவிற்கு நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் ரஷ்யா காத்தூனை அடிக்கடி ஹாரிஸ் பிரம்மா அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை  இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் ரஷ்யா காத்தூன் தலையை ஹாரிஸ் பிரம்மா பிடித்து சுவற்றில் மோதி அடித்து உள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஹாரிஸ் பிரம்மா மீட்டு அம்பத்தூரில் தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ரஷியா காத்தூன் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து வீட்டு உரிமையாளர் தியாகராஜன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஹாரிஸ் பிரம்மாவை  திங்கட்கிழமை மாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ADVERTISEMENT
ADVERTISEMENT