தமிழ்நாடு

தென் கடலோர தமிழக மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

2nd May 2022 12:53 AM

ADVERTISEMENT

தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (மே 2) மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் ஞாயிற்றுக்கிழமை கூறியது: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (மே 2) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 3 முதல் மே 5 வரை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மே 3-ஆம் தேதி முதல் மே 5-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

மழை அளவு:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் 30 மி.மீ., நீலகிரி மாவட்டம் கூடலூா் பஜாரில் 20 மி.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலா, கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை :

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் மே 5-ஆம் தேதி செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT