தமிழ்நாடு

மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருத உறுதிமொழி: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

1st May 2022 06:21 PM

ADVERTISEMENT

மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருத உறுதிமொழிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். 
மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி. மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், கல்லூரி முதல்வர் ரத்னவேல் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.  
நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் கல்லூரியின் டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருத உறுதிமொழிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க- மருத்துவ மாணவர்களின் மனதில் பிற்போக்குத் தனத்தை திணிப்பதா? - அன்புமணி கேள்வி

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பு முயற்சி வழிகாட்டுதலாக உள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி எடுத்துக்கொண்ட செய்தி அதிர்ச்சியை தருகிறது.
மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பு முயற்சியின் பகுதியாகவே இந்த வழிகாட்டுதல் செய்யப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்தியது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT