தமிழ்நாடு

மே தினம்: நினைவுச் சின்னத்துக்கு முதல்வர் மலரஞ்சலி

1st May 2022 09:53 AM

ADVERTISEMENT


மே தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவிலுள்ள மே தின நினைவுத் தூணுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் தொழிலாளர் நலத் திட்டங்களைப் பட்டியலிட்டார். இறுதியாக, "தொழிலாளர்களைப் போற்றுவோம், தொழிலாளர்கள் ஒற்றுமையை ஓங்கச் செய்ய உறுதியேற்போம்" என்று கூறி அவர் தனது உரையை முடித்துக் கொண்டார்.

மே தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் சிவப்பு நிறச் சட்டயை அணிந்திருந்தார். இதுதவிர ஏராளமான தொண்டர்களும் சிவப்பு நிறத்திலேயே ஆடைகளை அணிந்திருந்தனர்.

உடன் டி.ஆர். பாலு, ஆ. ராசா மற்றும் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் இருந்தனர். 

Tags : may day
ADVERTISEMENT
ADVERTISEMENT