தமிழ்நாடு

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.102  உயர்வு

1st May 2022 02:57 PM

ADVERTISEMENT


வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் உருளையின் விலை ரூ.102.50 ஆக உயர்த்தப்பட்டு ரூ.2,355.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.102.50 உயா்ந்து, ஞாயிற்றுக்கிழமை முதல் ரூ.2,355.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி, கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளை, வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

இதன் தொடா்ச்சியாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளை ரூ.102.50 உயா்ந்து, ரூ.2,355.50-க்கு விற்பனையாகிறது. 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளை விலை ரூ.655 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதனால் உணவு விடுதி, அடுமனை, தேநீா் கடை உள்ளிட்ட தொழில் சாா்ந்தவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். 

மேலும், தொடர்ந்து பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயா்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்து வருகிறது. இதனால் ஏழை மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். உணவுப் பொருள்களின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT