தமிழ்நாடு

தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழல்: நாடு திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

29th Mar 2022 09:53 AM

ADVERTISEMENT

முதல்வர் மு.க.ஸ்டாலின் துபை, அபுதாபி பயணத்தை முடித்துகொண்டு இன்று அதிகாலை  சென்னை திரும்பினார்.  முதல்வரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைந்ததுள்ளது மற்றும் தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக  வெளிநாட்டினர் பாராட்டு தெரிவித்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க 4 நாள் பயணமாக துபை, அபுதாபிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். முதலில் துபை சென்று அங்கு பல்வேறு முதலீட்டாளா்களைச் சந்தித்துப் பேசினார். 

ADVERTISEMENT

தமிழகத்தில் தொழில் தொடங்க அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். துபை பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அபுதாபி சென்று அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துபை, அபுதாபி பயணத்தை முடித்துவிட்டு இன்று அதிகாலை  சென்னை திரும்பினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT