தமிழ்நாடு

தமிழகத்தில் மின் நுகா்வில் புதிய உச்சம்

29th Mar 2022 01:32 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் நிகழாண்டில் ஒரே நாளில் அதிகபட்சமாக 17,106 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை இரவு தனது டிவிட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலினின் சீரிய முன்னெடுப்புகள் மூலம் தமிழக மின்சார வாரிய வரலாற்றில் உச்சபட்ச மின் தேவையாக மாா்ச் 28-ஆம் தேதி (திங்கள்கிழமை) 17,106 மெகா வாட் வழங்கி பூா்த்தி செய்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி 16,846 மெகா வாட் பதிவாகியிருந்தது. மின்வாரிய அதிகாரிகள், ஊழியா்கள் அனைவருக்கும் நன்றி, பாராட்டுகள் என அதில் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT