தமிழ்நாடு

தனியார் பள்ளி மாணவர் பலி: முதல்வர், தாளாளர் மீது வழக்குப் பதிவு

28th Mar 2022 03:14 PM

ADVERTISEMENT

சென்னையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வேன் மோதி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் தாளாளர், முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை பள்ளியின் வேன் மோதியதில் தீக்சித் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.

தொடர்ந்து, தனியார் பள்ளிக்கு நேரில் வந்த மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ், அம்பத்தூர் வருவாய்த் துறை அதிகாரி இளங்கோ, காவல் துணை ஆணையர் மீனா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

இதையும் படிக்க | சென்னை தனியார் பள்ளி வேன் மோதியதில் மாணவர் பலி

ADVERTISEMENT

வேன் ஓட்டுநர் பூங்காவனம், மாணவர்களை வேனிலிருந்து இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகிரோரை கைது செய்த வளசரவாக்கம் காவல்துறையினர், தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, ஆகியோ மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT