தமிழ்நாடு

மார்ச் 31ல் பிரதமருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

28th Mar 2022 12:44 PM

ADVERTISEMENT

வருகிற மார்ச் 31 ஆம் தேதி தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவிருக்கிறார். 

நான்கு நாள் பயணமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் துபை மற்றும் அபுதாபி சென்றுள்ளார். துபையில் இருந்து இன்று அபுதாபி சென்றுள்ள அவர் அங்கு முதலீட்டாளர்களை சந்தித்துப் பேசுகிறார். நாளையுடன் அவரது துபை பயணம் முடிவடைய உள்ள நிலையில் தில்லியில் மூன்று நாள்கள் இருக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

வருகிற மார்ச் 31 ஆம் தேதி(வியாழக்கிழமை) தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவிருக்கிறார். அப்போது நீட் விலக்கு மசோதா, ஜிஎஸ்டி இழப்பீடு உள்ளிட்ட தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 1 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT