ஸ்விஸ் ஓபன் பாட்மின்டனில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பதிவில், தனது ஆதிக்கமிகுந்த அபார ஆட்டத்தால் ஸ்விஸ் ஓபன் 300 இறகுப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று நம் அனைவரையும் பி.வி. சிந்து மீண்டும் ஒரு முறை பெருமை கொள்ளச் செய்துள்ளார்.
இதையும் படிக்க- பொது வேலைநிறுத்தம்: ஆட்டோக்களில் கட்டணம் உயர்வு; பொதுக்கள் அவதி
இது இப்பருவத்தில் ஒற்றையர் பிரிவில் அவர் கைப்பற்றியுள்ள இரண்டாவது தொடராகும். அவர் மென்மேலும் வெற்றிகளைக் குவித்து நமது இளைஞர்களுக்கு உந்துவிசையாக விளங்க எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.