தமிழ்நாடு

நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்கும் கடைகளுக்கு சீல்: உயர் நீதிமன்றம்

25th Mar 2022 06:05 PM

ADVERTISEMENT


நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்தி, அபராதம் விதிப்பது, இலக்கை எட்ட உதவாது என்று கூறியிருக்கும் நீதிமன்றம், அதுபோன்ற கடைகளை பூட்டி சீல் வைக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க.. பெண் செய்தியாளர் எழுதிய 3 உருக்கமான தற்கொலை கடிதங்கள்

சமூக ஆர்வலர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை விசாரித்த நீதிபதிகள் வி. பாரதிதாசன் மற்றும் என். சதீஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்பு இந்த உத்தரவை பிறப்பித்தள்ளது.

ADVERTISEMENT

2019ஆம் ஆண்டு ஜனவரி முதல், நீலகிரியில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனையாவதாகக் கூறி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT