தமிழ்நாடு

கடவுளின் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமிப்பதா?: உயர்நீதிமன்றம் கேள்வி

25th Mar 2022 03:14 PM

ADVERTISEMENT

 

எந்தக் கடவுள் பொது இடத்தை ஆக்கிரமிக்கச் சொன்னார் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாமக்கல்லில் சாலையை ஆக்கிரமித்து மாரியம்மன் கோயில் கட்டுமானம் உள்ளதாக பாப்பாயி என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார்.

இன்று வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி அடுத்த 2 மாதங்களில் கோயில் நிர்வாகம் கட்டுமானங்களை அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

ADVERTISEMENT

மேலும், கோயில் நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில் பொது இடத்தை ஆக்கிரமிக்கச் சொல்லி எந்தக் கடவுளும் கேட்பதில்லை என்றும் கடவுளின் பெயரில் நீதிமன்றத்தின் கண்களை மூடிவிட முடியாது எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷன் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT