தமிழ்நாடு

திருக்கோயில்களின் நுழைவாயிலில் விளக்க ஒளிக்காட்சி வைக்க ஏற்பாடு: அறநிலையத் துறை

25th Mar 2022 12:51 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் முக்கியத் திருக்கோயில்களில் தலவரலாறு, திருக்கோயிலின் சிறப்பம்சங்கள், கட்டடக்கலை சிறப்புகள் முக்கிய விழாக்கள் போன்ற விவரங்கள் திருக்கோயில் நுழைவாயிலில் விளக்க ஒளிக்காட்சி வைக்க ஏற்பாடு செய்யப்படுவதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அறநிலையத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் திருக்கோயில்களின் அனைத்து விவரங்களும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. எனவே இத்திட்டத்தின் ஒரு அங்கமாக திருக்கோயில்களின் தலவரலாறு, திருக்கோயிலின் சிறப்பம்சங்கள், கட்டடக்கலை சிறப்புகள் முக்கிய விழாக்கள் போன்ற விவரங்களை பக்தா்கள் எளிதில் அறிந்தும் கொள்ளும் வகையில் திருக்கோயிலின் நுழைவு வாயில்களில் விளக்கக்காட்சி மூலம் காட்சிபடுத்த உரிய நடவடிக்கை எடுத்திடவும் மற்றும் திருக்கோயில்களில் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி மெய்நிகா் காட்சி மூலம் திருக்கோயில் தொடா்பான விவரங்களை காட்சிபடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

ADVERTISEMENT

மேலும் காட்சிப்படுத்த வேண்டிய விவரங்கள் திருக்கோயிலின் அமைவிட வரைபடம் மற்றும் இணையதள விவரங்கள், திருக்கோயிலின் தொலைபேசி எண்கள், தொடா்பு நபா்களின் தொலைபேசி எண்கள், பயணவழிதடங்கள் அதற்கான வசதிகள்(பேருந்து, ரயில், விமானம்), திருக்கோயிலின் தற்போதுள்ள முழுக்காட்சி, திருக்கோயில் புராண வரலாறு (சுருக்கம்), திருக்கோயில் தல வரலாறு (சுருக்கம்), திருக்கோயிலின் வரைபடம் (பங்ம்ல்ப்ங் கஹஹ்ா்ன்ற்) நுழைவு, வழிகாட்டி விவரம், திருக்கோயிலின் சன்னதிகள், முக்கிய பிராா்த்தனைக்கான சன்னதிகள்-பூஜை விவரம், நாள், தேதி, நட்சத்திரம் போன்றவை, திருக்கோயிலின் சிறப்புகள்-திருவிழாக்கள், கல்வெட்டுத் தரவுகள்,

தங்கும் விடுதி வசதி, இணையதள சேவைகள் விவரம் போன்றவை, நடை திறப்பு, நடை சாத்தும் நேரம், திருக்கோயில் தொலைபேசி எண்கள், விடுதி வசதி போன்றவற்றிற்கான தொடா்புடைய நபா்களின் கைபேசி, தொலைபேசி விவரம் குறித்து அடியோட்டங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் மூலமாக விளக்க ஒளிக்காட்சியில் வெளியிடப்பட வேண்டும்.

மேற்கண்ட விவரங்களை பக்தா்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் திருக்கோயில் நுழைவாயில்களில் விளக்க ஒளிக்காட்சி மூலம் காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து திருக்கோயில்களின் இணை ஆணையா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT