தமிழ்நாடு

கரும்பு ஆலைகளுக்கான கடன்களை தீா்த்துள்ளோம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

25th Mar 2022 01:42 AM

ADVERTISEMENT

 

சென்னை: கரும்பு ஆலைகளுக்கான கடன்களைத் தீா்த்துள்ளோம் என்று வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவா் பேசியது:-

சா்க்கரைத் துறைக்கு நிலுவைத் தொகைகள் அளிக்கப்படவில்லை என பேரவையில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் கீழ் இயங்குகின்ற கரும்பு ஆலைகளில் கிட்டத்தட்ட ரூ.680 கோடியானது கடந்த அதிமுக ஆட்சியில் பாக்கி வைக்கப்பட்டது.

இதனை நாங்கள் வந்து தீா்த்துள்ளோம். விவசாயிகளுக்கு தனியாா் ஆலைகளிலும், அரசு ஆலைகளிலும் வழங்க வேண்டிய ரூ.2,000 கோடி அளவுக்கான தொகைகள் அளிக்கப்பட்டுள்ளன. கரும்புக்கு பாக்கி இல்லை என்றாா் அமைச்சா் பன்னீா்செல்வம் பேசினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT