தமிழ்நாடு

மகிழ்ச்சியான செய்தி: கரோனா நோயாளிகளே இல்லாத 5 மாவட்டங்கள்

22nd Mar 2022 01:20 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 52 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதில் நல்ல செய்தி என்னவென்றால், மொத்தமுள்ள 38 மாவட்டங்களில், 22 மாவட்டங்களில் ஒரு கரோனா பாதிப்பும் கண்டறியப்படவில்லை. இந்த 22 மாவட்டங்களில் 10க்கும் குறைவான கரோனா நோயாளிகளே உள்ளனர்.

அது மட்டுமல்ல, அரியலூர், கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் கரோனா நோயாளிகளே இல்லை என்கிறது புள்ளி விவரங்கள்.

ADVERTISEMENT

 6 மாவட்டங்களில் ஒரே ஒரு பாதிப்புதான் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல கரோனாவுக்கு ஒருவரும் பலியாகவில்லை. 96 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 576 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையும் படிக்க.. இனி +2 மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது: மத்திய பல்கலை.களுக்கு பொது நுழைவுத் தோ்வு

ஆனால், 19 புதிய கரோனா பாதிப்புகளுடன் சென்னை வழக்கம் போல முதல் இடத்தில் உள்ளது. அது மட்டுமல்ல, இரட்டை இலக்கத்தில் கரோனா உறுதியாகும் மாவட்டமாகவும் சென்னை உள்ளது.  மற்ற மாவட்டங்களில் ஒற்றை இலக்கங்களிலேயே கரோனா உறுதியாகிவருகிறது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டது. புதிதாக 52 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,52,442 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 34,13,841 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.

இன்றைய நிலவரப்படி 576 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 163 பேர் மருத்துவமனையிலும், 25 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் உள்ளனர். இவர்களில் 200 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.  

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT