தமிழ்நாடு

சசிகலா மீது ஓ.பி.எஸ்-க்கு சந்தேகமில்லை: ராஜா செந்தூர்பாண்டியன்

22nd Mar 2022 07:15 PM

ADVERTISEMENT

 

ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் சந்தேகம் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளதாக சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜா செந்தூர்பாண்டியன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

படிக்க74 நாள்கள் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை; உண்மை பதிலை அளித்துள்ளேன்: ஓ.பன்னீர்செல்வம்

ADVERTISEMENT

சசிகலா மீது எந்தக்காலத்திலும் எனக்கு சந்தேகமில்லை என்று விசாரணையின்போது ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மக்களின் சந்தேகத்தைப் போக்கவே ஆணையம் அமைக்கப்பட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளதாகவும் வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறிப்பிட்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT