தமிழ்நாடு

இலங்கையில் பொருளாதார நெருக்கடி: கோடியக்கரை அருகே அதிநவீனப் படகில் கண்காணிப்பு

22nd Mar 2022 05:03 PM

ADVERTISEMENT

 

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை கடல் பரப்பில்  நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய அதிநவீன ரோந்து (ரோவர் கிராப்ட்) படகு மூலம் கடலோரக் காவல் படையினர் இன்று செவ்வாய்க் கிழமை ( மார்ச் 22) கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்தியக் கடலோர காவல் படை (கோஸ்டல் கார்டு) தென் கடலோரப் பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மண்டபம் பகுதியில் இருந்து வந்துள்ள இந்த படகு கோடியக்கரை கடல் பரப்பில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த படகு செவ்வாய்க்கிழமை சரணாலயத்தை சார்ந்துள்ள இந்திய விமானப் படையின் கண்காணிப்பு முகாம் அருகே தரைப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT