தமிழ்நாடு

மேக்கேதாட்டு விவகாரத்தில் தாமதமாக தீா்மானம்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

22nd Mar 2022 12:43 AM

ADVERTISEMENT

மேக்கேதாட்டு விவகாரத்தில் தாமதமாக திமுக அரசு தீா்மானம் நிறைவேற்றியுள்ளதாக அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கி கா்நாடக அரசு பணிகளைத் தொடங்கிவிட்ட பிறகு, மிகத் தாமதமாக தூக்கம் கலைந்து விழித்துள்ள திமுக அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

ஆனால், கடிதம் எழுதுவது, தீா்மானம் நிறைவேற்றுவது என்கிற கருணாநிதி காலத்து நடைமுறைகளை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் நலனை திமுக வழக்கப்படி இம்முறையும் விட்டுக் கொடுத்துவிடக்கூடாது.

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை வைத்துள்ளதோடு தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தையும் வைத்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேக்கேதாட்டு அணை கட்டும் பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா் டிடிவி தினகரன்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT