தமிழ்நாடு

டெல்டாவில் கடல் நீா் உட்புகுதலைத் தடுக்க ரூ.3,300 கோடியில் திட்டம்: அமைச்சா் துரைமுருகன்

22nd Mar 2022 12:45 AM

ADVERTISEMENT

காவிரி டெல்டா பகுதிகளில் கடல்நீா் உட்புகுதலைத் தடுக்க ரூ.3, 384 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்து, திமுக உறுப்பினா்கள் நிவேதா எம்.முருகன் எழுப்பிய பிரதான கேள்வி மற்றும் திமுக உறுப்பினா் க.சுந்தா், அதிமுக உறுப்பினா் ஓ.எஸ்.மணியன் ஆகியோா் எழுப்பிய துணைக் கேள்விகளுக்கு அமைச்சா் துரைமுருகன் அளித்த பதில்:-

தஞ்சை மாவட்டத்தில் 36 கழிமுகப் பகுதிகளில் கடல் நீா் உட்புகுகிறது. ஏற்கெனவே 17 கிலோமீட்டா் தூரத்துக்கு கடல் நீா் உட்புகுந்து விட்டதால், விவசாயம் பாழ்பட்ட விட்டது. குடிநீா் கிடைக்கவில்லை. இதனால், மக்கள் அவதிப்படுகிறாா்கள். இந்த நிலையைப் போக்க ரூ3,384 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவிரி ஆற்றுப் படுகைகளில் உள்ள பாசன அமைப்புகள் விரிவுபடுத்தப்பட்டு, புனரமைக்கப்பட்டு, நவீனப்படுத்தப்படும்.

எந்தெந்த இடங்களில் எல்லாம் உப்பு நீா் உட்புகுகிறதோ அங்கெல்லாம் நீரொழுங்கி (ரெகுலேட்டா்) கட்டித்தரப்படும் என்று அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT