தமிழ்நாடு

தேனி, கோவை, குமரியில் மொத்த காய்கறி வணிக வளாகம்: அமைச்சர் அறிவிப்பு

19th Mar 2022 01:57 PM

ADVERTISEMENT

தேனி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மொத்த காய்கறி வணிக வளாகம் அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்தார். 

2022 - 23ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று(சனிக்கிழமை)  பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். 

இதில், 'தமிழ்நாட்டில் விளையும் காய், கனிகள்  தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளம் போன்ற பிற மாநிலங்களின் தேவையினையும் பூர்த்தி செய்கின்றன. எனவே, கேரள அரசின் தோட்டக்கலை கழகமும், வியாபாரிகளும் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக காய்கறிகள், பழங்களை கொள்முதல் செய்ய வழிவகை செய்யும் வகையில், 2022-23 ஆம் ஆண்டில் தேனி,  கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், காய்கறிகள் வணிக வளாகம் பொது, தனியார் பங்களிப்புடன் (Public Private Partnership) அமைக்கப்படும்' என்றார். 

மேலும், 'அறிவியல் ரீதியாக தூய்மையான முறையில் அச்சுவெல்லத்தை தயாரிக்கும் முறையினை கரும்பு விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி விவசாயிகளும் நுகர்வோர்களும் பயன்பெறும் வண்ணம், சந்தைத் தேவைக்கேற்றவாறு வெல்லம், அச்சுவெல்லம், தூள் வெல்லம் போன்ற வெல்ல ரகங்களை உற்பத்தி செய்யும் முறையினை விவசாயிகளிடையே ஊக்கப்படுத்தும் விதமாக, 2022-2023 ஆம் ஆண்டில் ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய  பகுதிகளில் அச்சுவெல்லம் தயாரிக்க 100 இடங்களில் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் அச்சு வெல்ல தயாரிப்பு மையம் துவங்க 100 விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். இதற்காக, ஒரு கோடி ரூபாய் மாநில வேளாண் வளர்ச்சித் திட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT