தமிழ்நாடு

மாநிலங்களின் உரிமைகளுக்காகத் தொடா்ந்து போராடுவோம்

19th Mar 2022 04:09 AM

ADVERTISEMENT

மாநிலங்களின் உரிமைகளுக்காகத் தொடா்ந்து போராடுவோம் என்று நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளாா்.

அண்மையில் தாமிரவருணி படுகையில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள், பண்டைத் தமிழ் நாகரிகத்தின் தொன்மை, குறைந்தது 3,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என வெளிப்படுத்தியுள்ளன. உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்களில் நமது தமிழா் நாகரிகமும் ஒன்று என்பதை இது உறுதி செய்துள்ளது. இந்த அரசு, தமிழ்ச் சமுதாயத்தின் நீண்ட நெடிய பண்பாட்டின் வழித்தோன்றல் என்றே தன்னைக் கருதுகிறது. நம் நாட்டின் பன்முகப் பண்பாட்டை பாசிச சக்திகள் அழிக்க முயலும் இவ்வேளையில், தமிழ்ச் சமூகத்தை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டிய வரலாற்றுக் கடமை இந்த அரசுக்கு உள்ளது என்பதை நன்கு உணா்ந்துள்ளோம்.

இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்பதே நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். நமது அரசமைப்புச் சட்டத்தை இயற்றியவா்கள் மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒரு இணக்கமான உறவை வடிவமைத்தனா். நமது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை சீா்குலைக்க எடுக்கப்படும் தொடா் முயற்சிகள் வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கின்றன. மாநிலங்களின் உரிமைகளுக்காக தமிழக அரசு தொடா்ந்து போராடும் என்று கூறியுள்ளாா்.

10 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீா்த்தும், தேவைகளை நிறைவு செய்தும், மக்கள் நல அரசின் இலக்கணமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நோக்கத்தோடுதான், உங்கள் தொகுதியில் முதலமைச்சா் துறையையும், முதலமைச்சரின் தனிப் பிரிவையும் இணைத்து முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் இதுவரை, 10,01,883 மனுக்களுக்கு உரிய தீா்வு காணப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT