தமிழ்நாடு

அனைத்து அரசு மாணவியர் விடுதிகளிலும் காய்கறி, பழ, மூலிகைத் தோட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

19th Mar 2022 12:24 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மாணவியர் விடுதிகளிலும் காய்கறி, பழங்கள், மூலிகைச் செடிகளுக்கான தோட்டம் அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் அறிவித்தார். 

2022 - 23ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று(சனிக்கிழமை) பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 

தமிழகத்தில் அனைத்து அரசு மாணவியர் விடுதிகளிலும் காய்கறி, பழங்கள், மூலிகைச் செடிகளுக்கான தோட்டம் அமைக்கப்படும்.

ADVERTISEMENT

இத்தோட்டங்கள் பழங்கள், காய்கறிகள், மூலிகைச்செடிகளை, மாணவிகள் கண்டறியவும், சாகுபடி முறைகள், அவற்றிலுள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி அறிந்துகொள்ளவும் உதவும்.

இத்திட்டத்தின் மூலம் பழச்செடிகள், மூலிகைச் செடிகள், தென்னங்கன்றுகள், காய்கறி விதைகள், தோட்டக்கருவிகள் உள்ளிட்ட இதர இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு, விடுதி ஒன்றுக்கு 10,000 ரூபாய் வீதம் 200 விடுதிகளுக்கு முழுமானியத்தில் 20 லட்சம் ரூபாய் நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT