தமிழ்நாடு

தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23: சிறப்பு அம்சங்கள்

19th Mar 2022 10:21 AM

ADVERTISEMENT


தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக 2022-23 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு: 

* வேளாண்மையை உச்சத்திற்கு அழைத்துச் செல்ல இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையின் திட்டங்கள் உதவும். 

* வேளாண் நிதிநிலை அறிக்கை கடந்த ஆண்டு குழந்தை இந்த ஆண்டு நடந்து அடுத்த ஆண்டுகளில் ஓடும். 

ADVERTISEMENT

* கடந்த ஆண்டு 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டது. 

* கால நிலை மாற்றத்தால் வேளாண் உற்பத்தி பாதிக்கும். 

* உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கம் உணரப்படுகிறது.
தமிழகத்தில் வேளாண் பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

* சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

* ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது.

* கால நிலை மாற்றத்தால் பாதிப்பு பருவநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளதால் காலநிலை மாற்றத்தை தாங்கி வளரக்கூடிய விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

* வேளாண் இடுபொருள்கள் மானிய விளையில் வழங்கப்படும்.


* பயிர்காப்பீடு இழப்பீடு தொகை ரூ.2029 கோடியே 9 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 


* இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

* பசுந்தாள், மண்புழு உரம் தயாரிப்போருக்கு நிதியுதவி வழங்கப்படும். 

* 60 ஆயிரம் விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.

* பயிர்காப்பீடு திட்டத்திற்கு நிதிநிலை அறிக்கையில் மாநில அரசின் பங்காக ரூ.2339 கோடி ஒதுக்கீடு. 

* 66 ஆயிரம் ஏக்கரப் மாற்றுப்பயிருக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு.

* 7500 ஏக்கரில் இளைஞர்களுக்கு இயற்கை விவசாயம் செய்ய பயிற்சி அளிக்கப்படும். 

* மாநில வேளாண் வளர்ச்சித்திட்டம் புதிதாக செயல்படுத்த ரூ.71 கோடி ஒதுக்கீடு. 

* 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

 * கடந்த ஆண்டில் 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது சாதனையாகும்.

*  நெல் ஜெயராமன் பெயரில் 200 ஏக்கரில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி மையம் ஏற்படுத்தப்படும். 

* ரூ.12 கோடி மதிப்பீட்டில் செம்மரம், சந்தனம் போன்ற மதிப்புமிக்க மரங்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்

* அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு 300 கோடி நிதி ஒதுக்கீடு.

* தூத்துக்குடி, விருதுநகர் தென்காசி, கரூர், அரியலூர் மாவட்டங்களில் கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு பயிரிடலை அதிகரிக்க ரூ.28.50 கோடி ஒதுக்கீடு.

* துல்லிய பண்ணை திட்டத்தில் ரூ.5 கோடி மானிய விலையில் விதைகள், இடுபொருள்கள் விநியோகிக்கப்படும்.

* பூண்டு சாகுபடி வாய்ப்புள்ள பகுதிகளுக்கு விரிவுப்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு

* பனை மதிப்புக்கூட்டு பொருள்களுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

* 10 லட்சம் பனை விதைகள் விநியோகிக்கப்படும்.

*  சென்னை, திருச்சியில் நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.

 * காவிரி டெல்டாவில் 4,964 கி.மீ கால்வாய்களை தூர்வார ரூ.80 கோடி ஒதுக்கீடு.

* முதல்வர் சூரியசக்தி பம்ப்செட் திட்டத்தில் 3,000 பம்ப் செட்டுகள் வாங்க ரூ.65.3 கோடி ஒதுக்கீடு.

* சுய உதவிக்குழுவினர் ஆடு, மாடு, கோழி பண்ணைத் தொழில் தொடங்க மானியம் வழங்கப்படும். 

* இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 பேருக்கு தலா 1 லட்சம் நிதி உதவி  அளிக்கப்படும். 

* பயிர் உற்பத்தியை அதிகரிக்க துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் அமைக்கப்படும். 

* மாவட்ட அளவிலும், மாநி அளவிலும் சிறுதானிய திருவிழா நடத்தப்படும். 

* கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலையில் துவரை உற்பத்தி மண்டலம் அமைக்கப்படும்.

* சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழன் தளம் என்கிற புதிய இணையதளம் மூலம் விவசாயிகளுக்கு தகவல் பரிமாற்றம்  அமைக்கப்படும்.

* கடந்த ஆண்டு 3.35 லட்சம் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. 

* வேளாண் மற்றும் விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு காண தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்படும். 

* விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க 7 உழவர் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். 

* வேளாண் துறையில் சிறந்த உற்பத்தியை தரும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் பரிசு அளிக்கப்படும். 

* சோயபீன்ஸ் பயிரை அதிகரிக்க ரூ.1,20 கோடி செலவில் மத்திய அரசுடன் இணைந்து திட்டம் செயல்படுத்தப்படும். 

* ரூ.300 கோடியில் கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம். 

* கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டம். தகுதி வாய்ந்த கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் 1 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

* வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும். 

* ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு 20 சதவிகிதம் கூடுதல் மானியம் வழங்கப்படும்.

* மயிலாடுதுறையில் ரூ.75 லட்சம் செலவில் புதிய மண் பரிசோதனைக்கூடம் அமைக்கப்படும். 

* கரும்பு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், திசு கரும்பு நாற்று வளர்ப்பு உள்ளிட்டவை ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும். 

* வெல்லம் தயாரிப்பை ஊக்கப்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு.

* தமிழக விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள மண்ணின் வளம் தன்மை குறித்த அறிந்து கொள்ள கோவை வேளாண் பல்கலையுடன் இணைந்து தமிழ் மண் வளம் என்ற புதிய இணைய முகப்பு உருவாக்கப்படும். 

* தென்னை, மா, கொய்யா இடையே ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவிக்க நிதி ஒதுக்கீடு.

* தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு.

* தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

* தக்காளி சாகுபடிக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு.

* தேனி வளர்ப்பு தொகுப்புகளுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* உழவர் சந்தையில் காய்கறி வரத்தை அதிகரிக்கும் சிறப்புத் திட்டத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

* இலவச மின்சார திட்டத்திற்கு ரூ.5157 கோடி டான்ஜெட்கோவிற்கு மானியம் வழங்கப்படும். 

* பாரம்பரிய காய்கறிகள், மூலிகை பயிர்களை மீட்டெடுத்து ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

* கண்ணாடி கத்தரி, வாசுதேவநல்லூர் கத்தரியை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 

* உள்ளூர் ரக காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும். 

* 2022-23 நிதியாண்டில் வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு ரூ.33007 கோடி நிதி ஒதுக்கீடு. 

* விதை முதல் விளை பொருள்கள் வரை வாங்க ரூ.8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம் செய்யப்படும். 

* ரூ.30 கோடியில் அங்கக வேளாண்மை இயக்கம் செயல்படுத்தப்படும். 

* மாவட்டத்துக்கு 50 ஹெக்டேர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கக வேளாண்மை இயக்கம் செயல்படுத்தப்படும். 

* விளைபொருள்களில் ரசாயனங்களை கண்டறிய சோதனை சாலைகள் அமைக்கப்படும். 

* தமிழ்நாடு முழுவதும் மூலிகைத் தோட்டங்கள் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 

* தோட்டக்கலைத்துறை மூலம் மூலிகை தோட்டங்கள் வளர்க்க செடிகள் வழங்க நடவடிக்கை  எடுக்கப்படும்.

* தமிழ்நாடு அரசின் மாணவ, மாணவியருக்கான 10 ஆயிரம் விடுதிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

* சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், சூரியகாந்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும். 

* சூரியகாந்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.28 கோடி ஒதுக்கீடு. 

* வேளாண் ஒழுங்குமுறை விரிவாக்க மையங்களில் கிரெடிட்டி கார்டுகள் மூலம் பணப்பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்படும். 
 
* பனை மரம் ஏறும் சிறந்த கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும். 

* கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையை விட இந்த ஆண்டு கூடுதலாக ரூ.251 கோடி ஒதுக்கீடு. 

* 50 உழவர் சந்தைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு. 

* மதிப்புக்கூட்டு பொருள்களை தயாரிக்கும் இயந்திரங்களை வாங்க மானியமாக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

* தமிழகத்தில் 10 உழவர் சந்தைகள் ரூ.10 கோடியில் அமைக்கப்படும். 

* கிராமங்களில் வீடுகளில் இலவச தென்னங்கன்று வழங்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

* வேளாண் இடுபொருள், விதைகளை ஆன்லைனில் பதிவு செய்து விற்பனை செய்யப்படும். 

* மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். 

* உழவர் சந்தைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

* பூச்சித்தாக்குதல் மற்றும் நோய் மேலாண்மைக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு. 

* விவசாய இலவச மின்சாரத்துக்கு ரூ.5,157 கோடிய ஒதுக்கீடு. 

* மூலிகைத் தோட்டங்கள் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தோட்டக்கலைத்துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் மூலிகைத் தோட்டங்கள் வளர்க்க செடிகள் வழங்கப்படும்.  

* கிராமப்புற வேளாண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 50 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். 

* விலை நிலங்களில் ட்ரோன் மூலம் பூச்சிமருந்துகள் தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

* வேளாண் அமைச்சர் திட்டங்களில் வெளிப்படைத் தன்மையயை அதிரிக்க படிப்படியாக கணினி வழியே பதிவேற்றம் செய்யப்படும். 

* செல்போன் மூலம் வேளாண் மோட்டார்களை இயக்கும் நுட்பத்தை விவசாயிகள் பெறும் வகையில் ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு. 

* வேளாண் பம்புசெட்டுகளை தொலைவில் இருந்து இயக்கும் கருவிகளை வாங்க ரூ.5000 மானியம் வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகள் இரவு நேரங்களில் பாம்புக்கடியில் இருந்து தப்பிக்க இந்த திட்டம் உதவும்.

* திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் தொழிற்பேட்டை ஏற்படுத்தப்படும். 

* தடுப்பணைகள், ஏரிகள் புணரமைக்கப்படும். 


* தூர்வாரும் பணிக்காக ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

* அயிரை, செல் கெண்டை, கால்பாசு போன்ற உள்நாட்டு மீன்கள் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* உள்நாட்டு மீன் வளர்ப்பு பாதுகாப்புக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு. 

* 10 அணைகளில் மீன் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* நாகை மாவட்டத்தில் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை ஏற்படுத்தப்படும். 

* 38 கிராமங்கலில் மதிப்புக்கூட்டம் சந்தைப்படுத்துதல் மையங்கள் அமைப்பதற்காக ரூ.95 கோடி ஒதுக்கீடு. 

* கருப்பட்டி மதிப்பு சார்ந்த பனை பொருள்கள் உற்பத்திக்கு 75 சதவிகிதம் மானிய உதவி வழங்கப்படும். 

* கேரளம் தோட்டக்கலை தமிழகத்தில் நேரடி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* கோவை, தேனியில் மொத்த காய்கனி மையம் அமைக்கப்படும். 

* தஞ்சை, சேலம், திருவள்ளூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் சோயா பீன்ஸ் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

* திண்டிவனம், தேனி மற்றும் மணப்பாறையில் ரூ.381 கோடியில் மூன்று மிகப்பெரிய அளிவிலான உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும். 

* பசுமைக்குடில் நிழல்வலைக்கூடம், நிலப்போர்வை, ஹைட்ரோபோனிக்ஸ், செங்குத்து தோட்டம் போன்ற உயர் தொழில்நுட்பங்களுக்கு ரூ.25.9 கோடி ஒதுக்கீடு. 

* தமிழகத்தில் ரூ.8 கோடி செலவில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகப்படுத்தப்படும். 

* மலர் சாகுபடியை அதிகரித்தத் திட்டம்.

* மல்லிகை சாகுபடியில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. 

* தமிழ்நாட்டில்  மலர் சாகுபடியை 4,250 ஏக்கராக அதிகரிக்கத் திட்டம். 

* மல்லிகை, சம்பங்கி, செவ்வந்தி, ரோஜா ஆகிய மலர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5.37 கோடி ஒதுக்கீடு. 

* வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்திற்கு ரூ.30.56 கோடி ஒதுக்கீடு.

* வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் உற்பத்தியாளர் குழு, சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க  ரூ.30,56 கோடி ஒதுக்கீடு.

* ஆறு வேளாண் கருவிகள் அடங்கிய வேளாண் கருவிகள் தொகுப்பு வழங்கப்படும். 

* நெல் அறுவடைக்குப்பின் பயறுவகைகள் சாகுபடியை ஊக்கப்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு மூலம் கூடுதலாக 13 ஆயிரம் மெட்ரிக் டன் பயறு உற்பத்தி செய்யப்படும். 

* புறநானூற்றில் பருத்தியை வேலியாக உடைய ஊர்களைப் புலவர்கள் பாராட்டியுள்ளனர்.

* பருத்தியின் உற்பத்தியை உயர்த்திட நீடித்த நிலையான பருத்தி இயக்கம் ரூ.15.32 கோடி செலவில் மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். 

* இயற்கை முறை பருத்தி சாகுபடியும் ஊக்குவிக்கப்படும். 

* விளைபொருள்களுக்கு ஏற்ற விலை தொலையுணர்வு தொழில்நுட்பம் மூலம் நில உடைமை பருவம் வாரியாக பயிர்கள் சாகுபடிப் பரப்பு, வேளாண் சந்தை நுண்ணறிவுப் பிரிவின் மூலம் விலை கணிக்கப்பட்டு விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT