தமிழ்நாடு

மனைகளுக்கு ஒப்புதல் வழங்க ஒற்றைச்சாளர முறை

19th Mar 2022 12:10 AM

ADVERTISEMENT

மனைகளுக்கு ஒப்புதல் வழங்குவது உள்ளிட்டவற்றுக்கு ஒற்றைச்சாளர முறை இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதன் விவரம்: திட்ட அனுமதி, கட்டடம் கட்டுதல், மனைகள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையை துரிதப்படுத்துவதற்காக சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமம், நகா் ஊரமைப்பு இயக்ககம், பெருநகர சென்னை மாநகராட்சி, உள்ளூா் திட்டக் குழுமங்கள் மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளால் ஒற்றைச் சாளர முறை இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும்.

பழைய குடியிருப்புகள் மறுமேம்பாடு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பழுதடைந்த, பழைய குடியிருப்புப் பகுதிகளின் மறுமேம்பாடு மேற்கொள்ளப்படும். இதற்காக, அரசு ஒரு மறுமேம்பாட்டுக் கொள்கையை இந்த ஆண்டு வெளியிடப்படும். இதுவரை அறுபது திட்டங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டு, தொடக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டங்களில் அதிகபட்ச தளப்பரப்பை அடைவதற்கு, தனியாா் நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

வீட்டு வசதித்துறைக்கு ரூ.8,737.71 கோடி: வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறைக்கென நிகழ் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பீடுகளின்படி, ரூ.8,737.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்துக்காக (நகா்ப்புறம்) ரூ.3,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT