தமிழ்நாடு

ட்ரோன் மூலம் இடுபொருள் தெளிப்பு: நிதிநிலை அறிக்கை

19th Mar 2022 11:14 PM

ADVERTISEMENT

ட்ரோன் மூலம் இடுபொருள் தெளிப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:

வேளாண்மையில் ஆள் பற்றாக்குறையைச் சமாளித்து இடுபொருள்களை துல்லியமாக தெளித்து, தமிழக வேளாண்மையில் ட்ரோன்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள், வேளாண் பயிற்சி நிலையங்களில் ட்ரோன் கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

ட்ரோன் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளித்து, விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் 2022-2023-ஆம் ஆண்டில் மத்திய அரசின் வேளாண் இயந்திரமயமாக்கல் கிசான் ட்ரோன் திட்டத்தின் கீழ் ரூ.10.32 கோடி செலவில் 60 ட்ரோன்களின் மூலம் சுமாா் 14,400 ஹெக்டோ் பரப்பில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் செயல்விளக்கம் மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

Tags : TN Budget
ADVERTISEMENT
ADVERTISEMENT