தமிழ்நாடு

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

19th Mar 2022 03:11 PM

ADVERTISEMENT


சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பல புதிய வசதிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணிகளாக திகழ்வது மெட்ரோ பயணிகள் தாங்கள் இறக்கும் இடத்திலிருந்து சென்று வருவதற்கான வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, எழும்பூர், சென்ட்ரல் மற்றும் கிண்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் தென்னக ரயில்வே பயணச் சீட்டை இந்த மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பெரும் வசதிக்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வசதி விரைவில் நடைமுறைக்கு வரும்.

இதையும் படிக்க.. மகன், மருமகள், பேத்திகளை வீட்டோடு எரித்துக் கொன்ற முதியவர்

ADVERTISEMENT

இதைத் தவிர, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து ஐ.டி. மற்றும் தனியார் பெரு நிறுவனங்களுக்குச் சென்று வரும் பயணிகளுக்கு அந்தந்த நிறுவனங்களே மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணைப்பு பேருந்து வசதிக்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இது போன்று வசதிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்து வருவதையொட்டி பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT