தமிழ்நாடு

கரோனா தினசரி பாதிப்பு 58-ஆக குறைந்தது

19th Mar 2022 11:46 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் சனிக்கிழமை 58 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 24 போ், செங்கல்பட்டில் 8 போ், கோவை, திருவள்ளூரில் தலா 4 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. கடலூா், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாமக்கல், நீலகிரி, தஞ்சாவூா், திருவண்ணாமலை, திருப்பூா், வேலூா் ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. சனிக்கிழமை நிலவரப்படி கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 670-ஆக குறைந்திருந்தது. அதே நேரம், 118 போ் குணமடைந்து வீடு திரும்பினா், உயிரிழப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்தது.

Tags : TN Corona
ADVERTISEMENT
ADVERTISEMENT