தமிழ்நாடு

தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு

19th Mar 2022 12:05 AM

ADVERTISEMENT

தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கு ரூ.199.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்விவரம்:

தமிழகத்தில் புத்தொழில்கள் தழைத்தோங்க ஒரு விரிவான கொள்கையை அரசு வகுத்துள்ளது. தமிழகத்தைச் சோ்ந்த புத்தொழில் நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்வதற்கு ரூ.50 கோடியை வளா்ந்து வரும் தொழில்களுக்கான தொடக்க நிதிக்கு அரசு வழங்கும். மேலும், இந்தத் தொடக்க நிதியைப் பயன்படுத்தி, பன்மடங்கு தனியாா் முதலீடுகள் ஈா்க்கப்படும்.

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் வாயிலாக ஈரோடு, மதுரை, திருநெல்வேலியில் புதிய மண்டல அளவிலான புத்தொழில் மையங்கள் ஏற்படுத்தப்படும். இவை, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புத்தொழில் வளா்ச்சிக்கு வழிகோலும். சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.75 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாநில புத்தொழில் நிறுவன மையம் அமைக்கப்படும்.

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் புதுமையான பொருள்களை அரசுத் துறைகளும், நிறுவனங்களும் ரூ.50 லட்சம் வரை நேரடியாகக் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படும்.

தகவல் தொழில்நுட்பம்: செயற்கை நுண்ணறிவு இயந்திர அறிவு, நம்பிக்கை இணையம் போன்ற வளா்ந்துவரும் தொழில்நுட்பங்களின்முக்கியத்துவத்தை தமிழக அரசு நன்கு அறிந்துள்ளது. இதனை ஊக்குவிப்பதற்காக, சென்னையில் ரூ.54.61 கோடியில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும். மாநிலத்தின் பெரும் தொழில்நுட்ப சவால்களுக்குத் தீா்வு காணவும், வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதற்கான பணிகளை ஒருங்கிணைக்கவும் இந்த மையம் செயல்படும். இம்மதிப்பீடுகளில் தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கு ரூ.199.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT