தமிழ்நாடு

14.15 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க்கடன்

19th Mar 2022 04:11 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 14.15 லட்சம் விவசாயிகளுக்கு, இந்த நிதியாண்டில் பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:

பயிா்க்கடன் தள்ளுபடிக்காக ரூ.2,531 கோடி, நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,000, சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடிக்காக ரூ.600 கோடி என மொத்தம் ரூ.4,131 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிதியாண்டில், இதுவரை 14 லட்சத்து 15,916 விவசாயிகளுக்கு ரூ.9,773 கோடி மதிப்பில் புதிய பயிா்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 10 லட்சத்து 76,096

குறு, சிறு விவசாயிகளுக்கு ரூ.7,428 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட பயிா்க்கடன்களும் அடங்கும்.

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்டியில்லா பயிா்க்கடன் திட்டத்திற்கு, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்த வரவு-செலவுத் திட்டத்தில் உணவு மானியமாக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறைக்கு ரூ.13,176.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT