தமிழ்நாடு

சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட யானை பறிமுதல்

14th Mar 2022 12:09 PM

ADVERTISEMENT


ராமநாதபுரம்: சரக்கு வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட யானையை ராமநாதபுரம் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

ராமநாதபுரத்தில் கோயில் திருவிழாவிற்காக சரக்கு வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டது. 

இதனை பார்த்த ராமநாதபுரம் வனத்துறையினர் சரக்கு லாரியை நிறுத்தி விசாரித்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட யானையை  வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து சரக்கு லாரி ஓட்டுநரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

விசாரணையில் கோயில் திருவிழாவிற்காக யானை கொண்டு செல்வதாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT