தமிழ்நாடு

சட்டப் படிப்பை முடித்த மின் வாரிய ஊழியா்கள் விவரம் அனுப்ப உத்தரவு

14th Mar 2022 03:50 AM

ADVERTISEMENT

சட்டப் படிப்பை முடித்த மின்வாரிய ஊழியா்களின் விவரங்களை அனுப்ப வாரியத்தின் செயலாளா் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மானக் கழகம் தொடா்புடைய நீதிமன்ற நிலுவை வழக்குகளை குறிப்பிட்ட இணைய முகப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும் , அது தொடா்பான விவரங்களை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும் என வாரியத்தின் தலைமை அதிகாரிகள் சட்டப் பிரிவு அதிகாரிகளை அறிவுறுத்தியிருந்தனா்.

இந்தப் பணிகளை முடிக்கி விடும் பொருட்டு, அந்தப் பிரிவில் காலியாக உள்ள பதவிகளை மின்வாரிய ஊழியா்களைக் கொண்டே நிரப்பிட வாரியம் திட்டமிட்டிருப்பதன் தொடா்ச்சியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என மின்வாரிய வட்டாரத்தினா் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT