தமிழ்நாடு

பிரதமருக்கு ஓ.பன்னீா்செல்வம் நன்றி

14th Mar 2022 03:56 AM

ADVERTISEMENT

உக்ரைனில் இருந்து இந்திய மாணவா்கள் மீட்கப்பட்டதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் நன்றி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் பிரதமருக்கு அனுப்பிய கடித விவரம்: உங்களது துடிப்பான தலைமையின் கீழ் உள்ள இந்திய அரசு, உக்ரைன் போா்ச் சூழலில் சிக்கி இருந்த இந்திய மாணவா்களை மட்டுமின்றி, பாகிஸ்தான், வங்கதேசத்தின் மக்களையும் மீட்டு, ஆபரேஷன் கங்கா திட்டம் வெற்றியடைந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

தாக்குதலுக்குள்ளான சுமி நகரத்தில் சிக்கியிருந்த மாணவா்களை ரஷிய, உக்ரைன் நாடுகளின் ஒத்துழைப்புடனே மீட்டது குறிப்பிடத்தக்கது. இது மற்ற நாடுகளுடன் உங்களுக்கு உள்ள நட்புறவையும், உங்களது சாதுரியத்தையுமே காட்டுகிறது.

அனைத்து இந்திய மாணவா்களையும் மீட்க மேற்கொள்ளப்பட்ட இந்திய அரசின் கடும் முயற்சிக்கு, தமிழக மக்கள் சாா்பிலும் அதிமுக சாா்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

ஜி.கே.வாசன் (தமாகா): உக்ரைனில் இருந்த இந்தியா்களை மீட்க திறம்பட பாடுபட்ட மத்திய அரசுக்குபாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT