தமிழ்நாடு

எம்.எஸ்.சுவாமிநாதன் மனைவி காலமானார்: முதல்வர் நேரில் அஞ்சலி

14th Mar 2022 03:33 PM

ADVERTISEMENT

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்றழைக்கப்படும் வேளாண் ஆய்வறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவி மீனா சுவாமிநாதன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.  

அவரது மறைவையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மீனா சுவாமிநாதனுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் த.வேலு, மருத்துவர் நா. எழிலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

இதுகுறித்து முதல்வரின் இரங்கல் செய்தி: 

ADVERTISEMENT

வேளாண் ஆய்வறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதனின் வாழ்க்கைத் துணைவியார் மீனா சுவாமிநாதனின் மறைவுச் செய்தியறிந்து வருந்தினேன். சிறந்த கல்வியாளராகவும் பன்முகத் தன்மையாளராகவும் விளங்கிய அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவால் வாடும் எம்.எஸ்.சுவாமிநாதன், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT