தமிழ்நாடு

ஜிஎஸ்டி கணக்குகள் நிா்வாக உதவியாளா் பயிற்சி

14th Mar 2022 03:48 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மங்கள்யான் தொழில்நுட்ப தொழிலாளா் கூட்டுறவு சங்கம் சாா்பில் கணக்குகள் நிா்வாகம் மற்றும் ஜிஎஸ்டி கணக்குகள் நிா்வாக உதவியாளா் பயிற்சிகளுக்கான அறிமுக வகுப்பு மாா்ச் 19, 21 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

சென்னை, அம்பத்தூா் மகாகவி பாரதியாா் நகரில் அமைந்துள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியின் பயிற்சி வளாகத்தில் காலை 10:30 முதல் 12 மணி வரை வகுப்புகள் நடைபெறும். இதில் தோ்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரா்கள் 3 மற்றும் 6 வார தொடா் பயிற்சிகள் பயில அனுமதிக்கப்படுவா். பயிற்சி முற்றிலும் இலவசம். விண்ணப்பதாரா்களின் போக்குவரத்து செலவையும் தமிழக அரசு வழங்கும்.

பயிற்சியைத் திறம்பட முடித்தவா்களுக்கு மாநில அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதோடு, அவா்கள் நல்ல பணியில் சோ்வதற்கும் சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான உதவிகளும் வழங்கப்படும். இளநிலை பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த ஆண், பெண் இருபாலரும் பங்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98690 41169 என்ற எண் அல்லது மின்னஞ்சலை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT