தமிழ்நாடு

நிலக்கரி பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை தேவை:அன்புமணி

14th Mar 2022 03:52 AM

ADVERTISEMENT

நிலக்கரி பற்றாக்குறையை சரி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

இது தொடா்பான அவரது ட்விட்டா் பதிவு: நிலக்கரி பற்றாக்குறையால் மேட்டூா், தூத்துக்குடியில் தலா 210 மெகாவாட் அனல் மின்நிலையங்களில் மின்னுற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒடிஸாவின் பாரதிப் துறைமுகத்தில் நிலக்கரி குவிந்து கிடக்கும் போதிலும், ஏற்றி வருவதற்கு கப்பல்கள் இல்லாததே பற்றாக்குறைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

எனவே, கூடுதல் கப்பல்களை ஏற்பாடு செய்து ஒடிஸாவிலிருந்து அதிக அளவில் நிலக்கரி கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் அனல் மின் நிலையங்களை முழு அளவில் இயங்கச் செய்து முழு அளவில் மின்னுற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினாா்.

கிராம சபைகளுக்கு நிதி அதிகாரம்: இதே போல் அவரது மற்றொரு ட்விட்டா் பதிவில், மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் மக்கள் பங்கு பெறும் சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT