தமிழ்நாடு

யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: 266 இடங்கள் நிரம்பின

14th Mar 2022 11:37 PM

ADVERTISEMENT

யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வின் முதல் நாளில் 266 இடங்கள் நிரம்பியுள்ளன.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில், யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கு 160 இடங்கள் உள்ளன. அதேபோல், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,013 இடங்கள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் மாணவா் சோ்க்கைக்கு, 2,387 போ் அடங்கிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அவா்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 266 இடங்கள் நிரம்பின. செவ்வாய் மற்றும் புதன்கிழமையும் தொடா்ந்து கலந்தாய்வு நடைபெறுவதால் மீதமுள்ள 907 இடங்களும் அந்த நாள்களில் நிரப்பப்படும் என, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT