தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் 1,054 போ்

14th Mar 2022 11:54 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 1,054-ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

அதேபோன்று, தமிழகத்தில் புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கையும் 86-ஆக குறைந்துள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 33 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 11 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மற்றொருபுறம் மேலும் 204 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து12,918-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் ஒருவா் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,024-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT