தமிழ்நாடு

முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து குறைவு: கேகேபட்டி பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு

10th Mar 2022 09:36 AM

ADVERTISEMENT

 

கம்பம்: முல்லைப் பெரியாற்றிலிருந்து தமிழக பகுதிக்கு திறந்து விடும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 100 கன அடியாக குறைக்கப்பட்டதால் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி பகுதியில்  மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்கு குடிநீர் வினியோகம் இரண்டு திட்டங்கள் மூலம் செயல்பட்டு வருகின்றன.

லோயர் கேம்பிலிருந்து பைப்லைன் மூலம் ஒரு திட்டமும், முல்லைப் பெரியாற்றில் நீரேற்று நிலையம் அமைத்து, அதன் மூலம் மற்றொரு திட்டமும் செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், முல்லைப்பெரியாற்றிலிருந்து தமிழகத்திற்கு திறந்து விடும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 100 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் ஆற்றில் நீர் வரத்து குறைவு ஏற்பட்டதால் காமயகவுண்டன்பட்டி நீரேற்று நிலையத்திற்கு செல்லும் தண்ணீரை மணல்மேடுகள் தடுத்துள்ளதால் சரியான முறையில் நீர் செல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக செயல் அலுவலர் மல்லிகா, பணியாளர்கள், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆற்றில் உள்ள மணல் மேடுகளை அகற்றி நீரேற்று நிலையத்திற்கு தண்ணீரும் வரும்வகையில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் வரத்து வரும் அளவில் ஏற்பாடுகளைச் செய்தனர்.

இதுபற்றி நிர்வாக அலுவலர் செயல் அலுவலர் மல்லிகா கூறுகையில், இந்த நீரேற்று நிலையம் மூலம் காமயகவுண்டன்பட்டி நாள்தோறும் நான்கு லட்சம் குடிநீர் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது, கோடைகாலத்தில் தட்டுப்பாடு இல்லாமல் ஓரளவுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
 

இதையும் படிக்க | ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வனத்துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ADVERTISEMENT
ADVERTISEMENT