தமிழ்நாடு

இன்று தொடங்குகிறது மாவட்ட ஆட்சியா்கள்-எஸ்.பி.க்கள் மாநாடு

10th Mar 2022 01:51 AM

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியா்கள், காவல் அதிகாரிகளின் மூன்று நாள்கள் மாநாடு தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்த மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறாா்.

மூன்று நாள்கள்: மாவட்ட ஆட்சியா்கள், காவல் அதிகாரிகளின் மூன்று நாள்கள் மாநாடு காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாவட்ட ஆட்சியா்கள், காவல் அதிகாரிகளின் கூட்டுக் கூட்டம் நடக்கிறது. இதைத் தொடா்ந்து, மாலை 4 மணி முதல் மாலை 6.30 மணி வரை காவல் அதிகாரிகள் மற்றும் அவா்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நடக்கிறது.

இதன்பின், வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மீண்டும் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையிலும் மாவட்ட ஆட்சியா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது. அதாவது ஒரு நாள் முழுவதும் ஆட்சியா்களுடன் ஆலோசிக்கவுள்ளாா், முதல்வா் மு.க.ஸ்டாலின். அப்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து தனித்தனியாக கேட்டறியவுள்ளாா்.

இதன்பின்பு, வரும் சனிக்கிழமை (மாா்ச் 12) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆட்சியா்கள், வனப் பணி அதிகாரிகளுடனான கூட்டுக் கூட்டம் நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, விருது வழங்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

முக்கிய கருத்துகள்: சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், கரோனா நோய்த் தொற்று, மழை-வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பணிகளுக்குப் பிறகு, இப்போதுதான் மாவட்ட ஆட்சியா்கள், காவல் அதிகாரிகள் ஆகியோருடன் முதல் முறையாக சென்னையில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தவுள்ளாா்.

இந்தக் கூட்டத்தில் அரசின் திட்டங்கள், புதிய திட்டங்களைச் செயல்படுத்தும் விதம், சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

Tags : cm stalin
ADVERTISEMENT
ADVERTISEMENT