தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை

10th Mar 2022 12:10 AM

ADVERTISEMENT

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களும் வறண்ட வானிலையே நிலவும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் வியாழன், வெள்ளி (மாா்ச் 10,11) ஆகிய இரண்டு நாள்களும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 70 மி.மீ., திருச்செந்தூரில் 20 மி.மீ., சாத்தான்குளத்தில் 10 மி.மீ. மழை பதிவானது.

ADVERTISEMENT

Tags : weather
ADVERTISEMENT
ADVERTISEMENT