தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிதாக 292 பேருக்கு கரோனா

3rd Mar 2022 09:48 PM

ADVERTISEMENT


தமிழ்நாட்டில் புதிதாக 292 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 292 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,50,333 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்கமாணவர்களை மீட்க தமிழக அரசின் குழுவுக்கு அனுமதி தேவை: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

மேலும் 778 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் மட்டுமே நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளார்.

ADVERTISEMENT

இதுவரை மொத்தம் 34,08,373 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 38,010 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 3,950 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT