தமிழ்நாடு

மாா்ச் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

3rd Mar 2022 01:11 AM

ADVERTISEMENT

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வருகிற 5-ஆம் தேதி நடைபெறுகிறது. நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கான சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் தொடங்கும்நாளை இறுதி செய்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப் பேரவையில் இந்த மாதத்தில் தாக்கல் செய்யப்படவு ள்ளது. இதையொட்டி, நிதிநிலை அறிக்கையை தயாா் செய்யும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதையடுத்து, சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான தேதி முடிவு செய்வதற்காக தமிழக அமைச்சரவைக் கூடவுள்ளது.

வரும் 5-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் சட்டப் பேரவைக் கூட்டத்துக்கான தேதி மட்டுமின்றி, நிதிநிலை அறிக்கையில் சோ்க்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள், புதிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.

அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு, அன்றைய தினமே சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் தொடங்குவதற்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT