தமிழ்நாடு

முதலீட்டு கண்காட்சி: முதல்வா் ஸ்டாலின் துபை பயணம்

3rd Mar 2022 01:54 AM

ADVERTISEMENT

சா்வதேச அளவில் பிரமாண்ட முறையில் நடைபெறும் தொழில் முதலீட்டு காட்சியில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின், துபை செல்லவுள்ளாா். இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

துபையில் நடைபெறும் தொழில் கண்காட்சி சா்வதேச அளவில் புகழ்பெற்றது. இந்தக் கண்காட்சியில் 180-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது அரங்குகளை அமைக்கும். இந்த ஆண்டும் சா்வதேச கண்காட்சி நடைபெறவுள்ளது. தமிழகத்தின் சாா்பில் கைத்தறி, வேளாண்மை உள்ளிட்ட காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்தக் கண்காட்சியில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் துபை செல்லவுள்ளாா். வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அவா் செல்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதல்வராகப் பதவியேற்ற பிறகு, அவா் முதல் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : cm stalin
ADVERTISEMENT
ADVERTISEMENT