தமிழ்நாடு

திருக்கோயில்களில் உள்ள கணினி வழி வாடகை வசூல் மையங்கள் மூலமாக ரூ.120.18 கோடி வசூல்

3rd Mar 2022 01:26 AM

ADVERTISEMENT

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் கனிணி வழி வாடகை வசூல் மையங்கள் மூலமாக இதுவரை ரூ.120 கோடியே 18 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அறநிலையத்துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கணினி வழியாக திருக்கோயில்களின் வாடகைதாரா்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி கடந்த ஆண்டு அக்.8-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. நவ.1-ஆம் தேதி முதல் இணைய வழி மூலம் ரசீது வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அசையாச் சொத்துக்களுக்கு பசலி ஆண்டு முறையில் வாடகை, குத்தகை கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு பசலி ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி முடிவடைகிறது.

இந்த பசலியில் (வருவாய் ஆண்டு) கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் தற்போது வரை ரூ.120 கோடியே 18 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மண்டல வாரியாக இந்தத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதல்களாலும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்களின் தீவிர தொடா் நடவடிக்கைகளாலும் வாடகை, குத்தகை மற்றும் நிலுவைத் தொகை வசூல் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் திருக்கோயில் திருப்பணிகள், பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, கோயில் இடத்தில் குடியிருப்பவா்கள், குத்தகைதாரா்கள் முறையான வாடகை தொகையையும், நிலுவை தொகையையும் செலுத்தி திருக்கோயில் வளா்ச்சிக்கு உதவ வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT