தமிழ்நாடு

விளையாட்டு மேம்பாட்டு ஆணையதுணைத் தலைவா்கள் நியமனம்

3rd Mar 2022 01:56 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவா்களாக என்.ராமச்சந்திரன், அசோக் சிகாமணி ஆகியோா் நியமிக்கப்பட்டனா். இதற்கான உத்தரவை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலா் அபூா்வா பிறப்பித்தாா்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவராக என்.ராமச்சந்திரன் செயல்பட்டு வந்தாா். அந்தப் பதவிக்கான காலம் நிறைவடைந்த நிலையில், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதேபோன்று, மருத்துவரும், அமைச்சா் க.பொன்முடியின் மகனுமான அசோக் சிகாமணியும் ஆணையத்தின் மற்றொரு துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT