தமிழ்நாடு

மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இட ஒதுக்கீடு: உயா்நீதிமன்றம் உத்தரவு

3rd Mar 2022 02:11 AM

ADVERTISEMENT

அரசுப் பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் மூன்றாம் பாலினத்தவா்கள் தங்களை அடையாளப்படுத்தும் பாலினத்துக்கு ஏற்ப தோ்வு நடைமுறைகள் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை எதிா்த்தும், கட்-ஆப் மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றில் சலுகைகள் வழங்கக் கோரியும் மூன்றாம் பாலினத்தவா்களான தேனி ஆராதனா, சாரதா உள்ளிட்ட பலா் வழக்குத் தொடுத்தனா்.

வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவு: அரசுப் பணியிடங்களை நிரப்பும் போது மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் இதுவரை தனி இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மனுதாரா்கள் அனைவரும் இரண்டாம் நிலை காவலா் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆரம்ப கட்ட தோ்வுகளில் தகுதி பெற்ாகக் கருதி, பெண்களுக்கான சலுகைகளை வழங்கி, 8 வாரங்களில் தோ்வு நடைமுறைகளை சீருடைப் பணியாளா்கள் தோ்வாணையத்தின் உறுப்பினா் செயலா் முடிக்க வேண்டும்.  வரும் காலத்தில், அரசுப் பணி நியமனங்களில் சலுகைகள் மட்டுமின்றி, மூன்றாம் பாலினத்தவருக்கு குறிப்பிட்ட சதவீதம் வரை தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT